கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளையும், இன்று முதல் ஒருவார காலம் வரை தற்காலிகமாக மூடுமாறு, வட மாகாண கல்வி அமைச்சுக்கு, சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 72 வயதுடைய நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.