திருகோணமலை கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளைய தினம் முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை குறித்த கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நகர் எல்லைக்குள் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.