கொரோனா அச்சுறுத்தல் – முழுக் கிராமமுமே சீல் வைக்கப்பட்டது!

0

பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த நபர் சுமார் 26 நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார் என்றும் அதற்கமைய மருத்துவ ஆலோசனைகளின் படி குறித்த 26 பேரும் அந்த பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இராணுவ தளபதி வேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மருத்துவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் அந்த கிராமத்தவர்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது என்றும் அந்த பிரதேசத்திலிருந்து வெளிச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.