கொரோனா அச்சுறுத்தல் – மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

0

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல ஆகிய பொலிஸ் பிரிவுகளே உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அவிசாவளையில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அவிசாவளையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.