வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தலைமையகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
பம்மைமடு, கந்தக்காடு, பனிச்சங்கேணி, மயிலன்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படை முகாம்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொரவெள, கல்கந்த, கஹகொல்ல, தியத்தலாவை இராணுவ மருத்துவமனை மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமிலும் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த மத்திய நிலையங்களில் இதுவரை 8 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 723 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, தற்போது வரையான காலப்பகுதியில் இலங்கையில் 18 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.