கொரோனா – அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

0

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

அலரி மாளிகையில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலை குறிப்பாக, கொரோனா அச்சுறுத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கியுள்ளார்.