கொரோனா அறிகுறியுடன் குருநாகல் வைத்தியசாலையில் இருவர் அனுமதி!

0

கொரோனா அறிகுறிகளுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்போவ பகுதியிலுள்ள இராணுவ முகாமில் உள்ள இருவரே இவ்வாறு குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாற்றப்பட்டுள்ள குறித்த இருவரும் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.