கொரோனா எதிர்ப்பு சக்தி மருந்துகள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஆயுர்வேத பயிற்சியாளர்கள், சுமார் 30 நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கு ஒப்புதல் கோருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 10 பேரின் மருந்துகள் இதுவரை ஆயுர்வேத ஒழுங்கமைப்பு குழுவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையர் கே.டி.சி.எஸ்.குமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் தொடர்பில் சிலர் விளம்பரங்களை மேற்கொண்டு வருவதாக ஆணையாளார் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆயுர்வேத ஒழுங்கமைப்புக்குழுவின் கீழ், தொழிநுட்பக் குழு, சட்ட ஒழுங்குமுறைக் குழு மற்றும் ஊடகக் குழு என மூன்று துணைக் குழுக்கள் உள்ளன.

இந்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை விளம்பரப்படுத்த விரும்புவோர் ஊடக குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்று குமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பொதுமக்கள் இந்த விடயத்தில் கவனமாக செயற்பட வேண்டும்.

ஒப்புதல் வழங்கப்படாத அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் பிற மருந்துகள் குறித்து அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில் “பனியா’ என்று பிரபலமாக அழைக்கப்படும் மருந்து கறுப்பு சந்தையில் ஒரு கால் போத்தல் (175 மில்லிலிட்டர்கள்) 2,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.