கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டது இலங்கை!

0

இலங்கையில் முழுமையாக கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை கடற்படையினர் மட்டத்தில் பரவி வந்த கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வெலசர கடற்படை முகாமை, சுகாதார அதிகரிகளின் பரிந்துரைக்கமைய உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

தற்போது முகாமில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் முகாமை வெகு விரைவில் திறக்க முடியும்.

சமகாலத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள ஓரிரு கடற்படை சிப்பாய்களே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்களை தவிர்த்து முகாமில் புதிய கொரோனா நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

அத்துடன் கடற்படை கொரோனா கொத்துகள் தொடர்பிலான அவதானத்தை குறைத்துக்கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும் கடற்படையினரின் வேலைத்திட்டம் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் பாரிய அளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிபபிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் 80 வீதமானோர் முழுமையாக குணமடைந்துள்ளனர். ஒருவரேனும் ஆபத்தான நிலையில் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடற்படை சிப்பாய்களில் ஒருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் கொரோனா தொற்றினால் கடற்படையினர் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை 1884 பேர் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1252 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 679 பேர் கடற்படையினர் ஆவர்.

இதேவேளை கடந்த 45 நாட்களாக இலங்கையில் சமூக மட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் இனங்காணப்படவில்லை.

17 நாட்களாக எந்தவொரு கொரோனா நோயாளர்களும் இனங்காணப்படாத நிலையில் கொரோனா வைரஸ் பரவிலிருந்து முழுமையாக விடுபட்ட நாடாக நியூசிலாந்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.