கொரோனா கொத்தணிகள் நாடு முழுவதும் உருவாகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவ்வாறான கொத்தணிகள் உருவாகும் நிலைமையைத் தடுக்கும் பாரிய பொறுப்பு, நிறுவனப் பிரதானிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனமொன்றில், ஒருவருக்கு மாத்திரம் தொற்று ஏற்படும் பட்சத்தில், அது பாரிய அளவில் பரவக் கூடும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கடற்படையினரின் முகாம்களில், இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்கனவே அனுபவிக்கப்பட்டு வருவதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.