கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்

0

பொலநறுவை கல்லெல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து 5 சிறைக்கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காவல்துறை பேச்சாளரின் தகவல்படி இவர்கள் சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்த நிலையிலேயே தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா சிகிச்சை நிலையங்களில் தொற்றாளிகள் தப்பிச்சென்ற சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. எனினும் இதுவரை தப்பிச்சென்ற அனைவருமே பின்னர் கைது செய்யப்பட்டனர்.