கொரோனா தடுப்புக்காக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 37 மருந்துகள்

0

கொவிட்-19 வைரஸ் ஒழிப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 37 மருந்து வகைகளின் தரம் குறித்து ஆராயுமாறு உள்நாட்டு மருத்துவ அபிவிருத்தி, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, உள்நாட்டு வைத்திய தேசிய சபை மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த மருந்து வகைகளின் நோய் எதிர்ப்பு தரத்தின் சாதக தன்மை குறித்து ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் குறித்த நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி, குறித்த மருந்து வகைகளின் தரம் தொடர்பில் ஆராய்வதற்காக உணவு ஓளடத ஆயுர்வேத திணைக்களம் மற்றும் உள்நாட்டு வைத்திய தேசிய சபை ஆகியன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இந்த மருந்து வகைகள் தொடர்பிலான பரிசோதனைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

தனிமைப்படுத்தல் நிலையங்கள், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு இந்த மருந்து வகைகளை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.