கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத தலைவர்கள் தலையிடக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தகம் ஊடாக அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
‘கொரோனா தடுப்பு/நிவாரண நடவடிக்கையில் மருத்துவ விஞ்ஞானத்துக்கு புறம்பாக மத தலைவர்கள் தலையிடக்கூடாது.
இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
மருத்துவர்களை படைப்பதும் இறைவன்தானே? ஆகவே மருத்துவர் மூலமாக இறைவன் சொல்வதை கேட்டு நடந்துக்கொள்ளுங்கள்.
மத தலைவர்கள், இதில் இந்நேரம் நேரடியாக தலையிட்டால், அப்புறம் கொரொனா அவர்களையும் பிடிக்க, அப்புறம் அவர்களும் மருத்துவரிடம் போக வேண்டி வரும்.
இதுதான் ஆண்டவனின் “டிசைன்”.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.