கொரோனா தடுப்பூசியை பொறுபேற்க விமான நிலையம் செல்லும் ஜனாதிபதி கோட்டாபய

0

இந்தியாவில் இருந்து இன்று எஸ்ட்ரா செனேகா கொவிஷீல்ட் தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றது.

தடுப்பூசியை பொறுப்பேற்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவுள்ளார்.

இன்று காலை 11.00 மணிக்கு எயார் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தடுப்பூசி கொண்டு வரப்படவுள்ளது.

முதற்கட்டமாக கொண்டு வரப்படும் ஐந்து இலட்சம் தடுப்பூசிகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பொறுப்பெடுக்கவுள்ளார்.

இலங்கைக்கு கொண்டு வரப்படும் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேரடியாக சுகாதார அமைச்சுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்குள்ள குளிரூட்டியில் பாதுகாக்கப்படவுள்ளது. 2-8 பாகை செல்ஸியஸ் வெப்ப நிலையின் கீழ் அதனை களஞ்சியப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.