இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மூன்று நட்சத்திர விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றுவதற்கு குறித்த நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் சினமன்(Cinnamon), சிட்ரஸ்(Citrus), செரண்டிப் (Serendib) ஆகிய நட்சத்திர விடுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கான இடவசதியை வழங்குவதற்கு முன்வந்துள்ளன.
சிட்ரஸ்(Citrus) பொழுதுபோக்கு நிறுவனமானது, ஈவாஸ்கடுவவில் உள்ள சிட்ரஸ்(Citrus) நட்சத்திர விடுதியில் 150 அறைகளையும், செரண்டிப்(Serendib) பொழுதுபோக்கு நிறுவனமானது தனக்குச் சொந்தமான நீர்கொழும்பு கிளப் டொல்பின் நட்சத்திர விடுதியில் உள்ள 154 அறைகளையும், ஜோன் கீல்ஸ் நிறுவனமானது சினமன் நட்சத்திர தொடரில் உள்ள திருகோணமலையில் உள்ள ரின்கோ புளு நட்சத்திர விடுதியில் 81 அறைகளையும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன.