கொரோனா தாக்கத்தினால் பரிதவிக்கும் யாழ்ப்பாண குடும்பங்கள்

0

உலகம் முழுவதும் கொரோனாவின் வைரஸ் தொற்றானது பரவி மனிதர்களை வேகமாக பலிவாங்கிக் கொண்டு வருகின்றது.

இதை கட்டுப்படுத்துவதற்கான பாரிய முயற்சியில் வைத்தியர்கள் போராடி வருகின்றனர்.

அத்தோடு பொது மக்களும் பீதியில் தம்மையும் தமது குடும்பத்தையும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானிக்கப்படுவதுடன், அவர்கள் குறித்து இலங்கையிலிருக்கும் உறவினர்களும் கவலை கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றானது ஜேர்மனில் உள்ள சிங்கம் எனும்  வீதியில் சுமார் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருபப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனில் சிங்கம்  எனும் வீதியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பல குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இவர்கள்  கொரோனா பீதியில் இருப்பதாகவும், அதிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்காக தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீட்டில் சேமித்து வருவதாகவும் அத்தோடு  அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா பாடசாலைகளில் கல்வி கற்கும்  தமது குழந்தைகளுக்கு வராமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் எடுத்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் தமது உறவுகளுக்கு கொரோனாவின் தாக்கம்  பரவாமல் இருக்க வேண்டும் என தாயக உறவுகள் கவலை கொள்கின்றனர்.