கொரோனா தாக்கம் – இத்தாலியில் ஒரேநாளில் 427 பேர் உயிரிழப்பு!

0

கொவிட் – 19 எனப்படும் கொகொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏனைய நாடுகளை விட இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் உயிரிழந்தவர்களின் இத்தாலியில் ஒரேநாளில் 427 பேர் உயிரிழப்பு!எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

இதுவரையில் இத்தாலியில் மொத்தமாக 3405 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் இதுவரை 3245 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.

இத்தாலி கடந்த 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை முடக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தாலி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

எனினும், வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

உலக அளவில் தற்போது 245,613 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 10,048 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 88,437 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.