கொரோனா தொற்றால் மிக மோசமான நிலையை எட்டியுள்ள இலங்கை

0

கொரோனா தொற்றுநோயினால் நாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனை கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 

மோசமான நிலை எனும் போது, இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனை சிகிச்சை திறனை விட அதிகமாக உள்ளது. தொற்றுநோய் காரணமாக, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை வசதிகள் என்பன நிரம்பியுள்ளன என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மனித வளங்களில் பாரிய சிக்கல் நிலை எதிர்கொள்ளபடுவதாக, வைத்தியர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.