கொரோனா தொற்றாளருடன் பழகிய 50 பேர் தனிமைப்படுத்தல்!

0

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்பினை பேணிய 50 பேரை தனிமைப்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி கராபிப்பிட்டிய – அக்குரெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 50 பேர்  இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்புவதற்குரிய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 17 ஆண்கள் மற்றும் 17 பெண்கள், பெண் குழந்தைகள் 9 பேர் மற்றும் ஆண் குழந்தைகள் 7 பேர் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.