கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு

0

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) மாலை மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.