கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு!

0

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம்(புதன்கிழமை) மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், இதுவரையில் 42 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 255 பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.