கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு!

0

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மாத்திரம் 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.