கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 869 ஆக அதிகரிப்பு!

0

இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட அறுவரும் வெலிசர முகாமைச் சேர்ந்த கடற்படையினர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர்கள் அறுவரும் கராபிட்டிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 343 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர் என்பதுடன், 9 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 539 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.