கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரிப்பு!

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக  அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 449 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.