கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

திவுலபிடிய மற்றும் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது.

நேற்று மாத்திரம் 19 கொரோனா தொற்றாளர்கள் குறித்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 18 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வௌிநாடுகளில் இருந்து வந்த 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 7 பேருக்கும், குவைட்டில் இருந்து வந்த இருவருக்கும் மற்றும் ஈரானில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 197 பேர் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.