கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு!

0

நாட்டில் கொரோனா நோயாளர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 124 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதுடன், 231 பேர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மொத்தமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.