கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான தகவல் வெளியானது!

0

கொரோனா தொற்றுக்குள்ளான 692 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா ஒழிப்புக்கான தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்று 223 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 119 பேரும், களுத்துறையில் 112 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.