கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

0

இலங்கையில் மேலும் 270 பேருக்கு நேற்று(செவ்வாய்கிழமை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் நேற்று 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கொழும்பு கோட்டையில் 37 பேரும், நாரஹேன்பிட்டியில் 11 பேரும், நுகேகொடையில் 7 பேரும், ஹோமாகமையில் 5 பேரும், அதிக பட்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில், நேற்று 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 53 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 48 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 32 பேரும், கண்டி மாவட்டத்தில் 29 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 பேரும், நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 18 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 17 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 16 பேரும், கேகாலை மாவட்டத்தில் 15 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 81 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 75 ஆயிரத்து 842 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 453 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 714 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.