கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்!

0

கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, குறித்த நபரை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்ல நடவடிக்கைகளை எடுத்த சந்தர்ப்பத்திலேயே அவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பதவிய போகஹபிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தப்பியோடியுள்ள குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.