கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு

0

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குருநாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் கடற்படை சிப்பாய் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணுக்கு கடற்படை சிப்பாய் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

அத்துடன், குறித்த பெண் சிறுநீரக தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.