கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐவரின் முழு விபரம் உள்ளே!

0

நாட்டில் கொரேனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கொரோனா தொற்று ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக உயர் இரத்த அழுத்தம் அதிகரித்தமை மற்றும் மூளைக்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டமை ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கொரோனா தொற்று ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டமை மற்றும் மாரடைப்பு ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு 64 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டமை மற்றும் இளைப்பு ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.