கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது!

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதை ஆராய நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு இதற்கு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.