கொரோனா தொற்றினால் சுவிஸ், பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழப்பு!

0

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிஸ் மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் நோய் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்திருந்ததாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.