கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு – இலங்கையில் 16 பேர் பாதிப்பு

0

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு காரணமாக இலங்கையில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சைப்ரஸ், டுபாய் மற்றும் ஜோர்டானில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கே கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 16 பேரில் 13 பேர் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கொழும்பில் வசிக்கும் ஒருவருக்கும் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளபோதும் இன்னும் உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.