கொரோனா தொற்றிலிருந்து மேலும் மூவர் மீண்டனர்!

0

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் மூவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 139 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 649 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.