கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 16 பேர் இன்று(புதன்கிழமை) குணமடைந்துள்ளனர்.
தேசிய தொற்றுநோய் பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2064 பேராக அதிகரித்துள்ளது.
இதுவரை இலங்கையில் 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.