கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் சஜித்!

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து குறித்த இருவரும் சிகிச்சைப்பெற்று வந்தனர்.

இந்தநிலையில் இருவரும் சிகிச்சைகளை நிறைவு செய்துகொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இருவரும், கொழும்பு-02 கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.