கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

இன்றைய தினம் இதுவரை கண்டறியப்பட்ட 314 நோயாளர்களுடன் இதுவரை மொத்தமாக 10 ஆயிரத்து 105 பேர் கொரோனா வைரஸுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4282 ஆகும்.

19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5804 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.