கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

0

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

த சொய்ஸா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது.

ஆண் குழந்தைகள் இருவர் மற்றும் பெண் குழந்தைகள் இருவரே இவ்வாறு பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.