கொரோனா தொற்று – அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி நேற்று இரவு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இரத்மலானை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர் ஹிக்கடுவையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் நேற்று காலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு அவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவரது கணவர் மற்றும் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டாவது PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். எனினும் அவர்களுக்கு கொரோனா தொற்றவில்லை என உறுதியாகியுள்ளது.