கொரோனா தொற்று உறுதியானவர்களில் 208 பேர் கடற்படையினர் – சுகாதார அமைச்சு

0

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட 588 பேரில் 208 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாகவும் இதேவேளை தற்போது கொரோனா நோயாளிகளாக 588 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 317 பேர் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.