கொரோனா தொற்று சமூகத்தில் மறைக்கப்பட்ட வெடிகுண்டு போன்றது!

0

கொரோனா தொற்று சமூக மட்டத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என தொற்றுநோயியல் பிரிவு கூறினாலும், சமூகத்தில் தற்போதுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை நாம் நினைப்பதை விட தீவிரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

“மேல் மாகாணத்தில் இருந்தே ஏனைய இடங்களுக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளமை அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளன.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விரைவான ஆன்டிஜென் சோதனைகளின் போது பலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது வைரஸ் பரவுவதற்கான ஆபத்தான அறிகுறிகளை காட்டுகின்றது. எனவே, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர விரைவான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

“ஒவ்வொரு இடத்திலும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளின் போது குறைந்தது ஒருவரேனும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே, பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஒரு நல்ல அறிகுறி அல்ல, ஏனென்றால் கொரோனா தொற்று சமூகத்தில் மறைக்கப்பட்ட வெடிகுண்டு போன்றது என டொக்டர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.