கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை) மேலும் 194 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களில் 80 பேர் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அடையாளம் காணப்பட்ட மேலும் 114 பேர் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை சேர்ந்தவர்களும், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களும்  என குறிப்பிடப்படுகின்றது.

இதற்கமைய மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 38 ஆக அதிகரித்தது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை மூவாயிரத்து 328 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயிரத்து 697 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.