கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்ற நோயாளர்கள் இருக்கும் வைத்தியசாலைகளுக்கான பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொலிஸாருக்கும் மேலதிகமாக ஆயுதமேந்திய இராணுவத்தினரும் குறித்த வைத்தியசாலைகளுக்கான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில் கொரோனா நோயாளி நேற்று தப்பியோடியச் சம்பவத்தை அடுத்து இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.