கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் தொடர்பில் வெளியான புதிய தகவல்

0

மேல் மாகாணத்தில் இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையினால் மக்கள் சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளாளர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நடத்தி செல்லும் முறை மற்றும் நாட்டினுள் தற்போதைய நிலைமை தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் இலங்கை சுகாதார கட்டமைப்பு இதுவரையிலும் பலவீனமடையவில்லை.

ஆரம்பம் முதல் இதுவரையில் உரிய முறையில் நோயாளிகள் முகாமைத்துவம் செய்யப்படுகின்றனர்.

சிகிச்சை நடவடிக்கைகளை உரிய முறையில் நடத்தி செல்வதற்காக திறன் சுகாதார அமைச்சிடம் உள்ளது.

தற்போது நாட்டில் அவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவ இயந்திரங்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறிய காலத்தினுள் நோயாளிகள் பாரிய அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கொரோனா தொற்று சமூகமயமாகவில்லை என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளிகளும் கொரோனா பரவலுடன் தொடர்புடையவர்களாகும்.

அத்துடன் குணமடைந்து வீடு திரும்புபவர்கள் ஊடாக மற்றுமொருவருக்கு கொரோனா தொற்றுவதற்காக எவ்வித வாய்ப்புகளும் இல்லை.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் சிலர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் நீண்ட காலமாக நாள்பட்ட நோயினால் பாதிப்பட்டவர்களாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.