கொரோனா மரணச் சடங்கில் பங்கேற்ற 50 பேருக்கு ஏற்பட்ட நிலை!

0

அண்மையில் பாணந்துறை பகுதியில் உயிரிழந்த இளைஞனின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள 50க்கும் மேற்பட்டவர்கள் சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

27 வயது இளைஞன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து மரணச் சடங்கு நடத்தப்பட்டதில் அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதால் அவர்களுக்கும் கொரோனா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், மரணச் சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் 443 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர். இதில் 25 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து கண்டறியப்பட்டனர்.