கொரோனா வரைஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் மொத்தம் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நான்கு பேரும் கொழும்பு பண்டாரநாயக்க பகுதியைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர் என்றும் இதுவரை 107 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.