கொரோனா வைரஸை முறியடிப்பதற்கான இரு தடுப்பூசிகள் தொடர்பிலான ஆய்வுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் Inovio மருந்தாக்கல் நிறுவனத்தினால் இந்தத் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தத் தடுப்பூசிகளை விலங்குகளில் பரிசோதிப்பதற்கான அனுமதி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு பாதுகாப்பானதா என்பது தொடர்பில் அவுஸ்ரேலிய தேசிய விஞ்ஞான நிறுவகம் மதிப்பீடு செய்யவுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸின் தீவிர பரவல் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.