நாட்டில் மேலும் 07 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளதாக னர் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 11 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு நோயாளிகள் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அந்த வகையில் தொற்றுக்குள்ளான 210 பேரில் இதுவரை 56 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 154 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.