கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணின் தாய்க்கும் கொரோனா!

0

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட, முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளரான பெண்ணின் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குருநாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

பொல்பித்திகம – ராவாஎல பகுதியைச் சேர்ந்த, 58 வயதுடைய பெண்ணே, இவ்வாறு தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த பெண்ணின் 16 வயதான மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.